இந்திரணின் ராணி: அவதாரங்களும் அதிகாரங்களும் - கணேஷ் சுப்ரமணி

            வினோத் மலைச்சாமியின் இந்திரணின் ராணி குறும்படம், நால் வருணப் படைகளுக்கு எதிராக அவ்வருணங்களின் வரையறைகளில் இடமளிக்கப்படாத வருணமற்ற சாதியினரின் குரலாக ஒலிக்கிறது.

பிறப்பு கொண்டு ஏற்றத்தாழ்வைப் போதிக்கும் வருண அமைப்பில் நான்கு வருணங்களும் தங்களுக்குள் அதிகாரத்திற்கான மோதலை நிகழ்த்தியபடியே இருக்கின்றன. வருணங்களுக்குள் இல்லாத வருணம் அற்ற சாதியினருக்கு எதிரானதாகவும் அவர்களை அதிகாரப் போட்டியின் வரம்புக்குள்ளேயே கொண்டு வந்துவிடக் கூடாது என்கிற கவனமும் இந்த வருண மோதல்களின் இணைப் போக்காக வரலாற்றில் தொடர்ந்து வந்திருக்கிறது.

வனாந்திரம் - கணேஷ் சுப்ரமணி


பின்னிரவுப் பொழுதின்
அரைநிலா ஒளியில்
ஆளரவமற்ற
நெடுஞ்சாலையிலிருந்து
பிரிந்து செல்லும்
குறுஞ்சாலையில்
தன்னந்தனியே நடந்தேன்.

பதின் பருவத்தில்
இறந்துபோன சினேகிதியின்
உருவம் அருகில் அசைந்தது.
கூடவே
சலசலக்கும் காற்றின்
வினோத சத்தங்களின்
நடுவே சன்னமாய்க் கேட்டது
சின்னதாய் அழுகையொலி.

இணைய வெளியில் ஆசிரியர்கள் - கணேஷ் சுப்ரமணி


சட்டென்று மாறிய வானிலையைப் போல் கொரோனா காலம் கல்விச் சூழலை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. ஆசிரியர்களைச் சற்று விலகியிருக்கச் சொல்லிவிட்டு, தொழில்நுட்பம் கல்விப்பணியைக் கையிலெடுக்கிறது. இது ஒன்றும் திடீர் மாற்றமில்லைதான். தொன்னூறுகளில் கல்விப் பணிகளில் கணினி பயன்படத் தொடங்கிய போதே இந்தச் சூழ்நிலை வெளித் தெரியாமல் கருக்கொண்டு விட்டது. இணையப் பயன்பாடு பரவலாகத் தொடங்கிய இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின்னர் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் கல்வியில் மேலோங்கியது.

கொரோனாவுக்குப் பின்.. - கணேஷ் சுப்ரமணி

பூமி வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்களின் உழைப்பு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல; வரலாற்றையும் மாற்றிக் கொண்டிருக்கிறது கொரோனா. இந்தக் கொடுந்தொற்று நோயிலிருந்து உலகம் மீளலாம். ஆனால் இந்நோய் உருவாக்கியிருக்கும் தாக்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இருக்கும்.

பாரம்: சுமையாகும் சுமைதாங்கிகளின் கதை - கணேஷ் சுப்ரமணி


குடும்பம் என்பது தனிச்சொத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பொருளாதார ஒப்பந்த அமைப்பு. இந்தப் பொருளாதார ஒப்பந்தத்தைப் பராமரித்து சொத்துரிமையை ரத்த சம்பந்தத்திற்குள்ளேயே கடத்திச் செல்வதற்காக உருவானவையே உறவுகள் எனும் பழகுநிலைகள்.

அதாவது உறவுகள் உருவாவதிலும், நீடிப்பதிலும் பொருளாதாரம் முக்கியப் பங்காற்றுகிறது. ஒவ்வொரு உறவுக்கு இடையிலும் வெளியில் சொல்லப்படாத பொருளாதாரத் தொடர்பு உள்ளுறைந்து இருக்கிறது. சொல்லப்போனால் இந்தப் பொருளாதாரத் தொடர்புதான் குடும்ப அமைப்பைப் பலப்படுத்துகிறது; உறவுகளைப் பேணுகிறது.

5

வேடிக்கை பார்ப்பவர்களை
இழந்துவிட்ட
சாலையோர மரங்களும்
கண்மாய்களும்
செல்போன்களைச்
சபிக்கின்றன.

முற்பொழுதுகளில்
தமக்கிருந்த பெருமதிப்பை
இழந்த
ஜன்னலோர இருக்கைகளும்
உடன் சேர்ந்து
முனகுகின்றன.

சைக்கோ: கொலைகளின் உளவியல் - கணேஷ் சுப்ரமணி

நனவிலி மனத்தில் சிதைவுகளைக் கொண்டிருக்கும் ஒருவன் செய்யும் பெண் கொலைகள்தான் சைக்கோ படத்தின் கதை. தனக்கு உண்டான பாதிப்புகளுக்கான பதிலிச் செயல்களாக அவன் மற்றவர்களின் மரணத்தில் இன்பம் காண்கிறான். அதற்கான காரணங்களாக அவனுடைய குழந்தைப் பருவம் தொடங்கி அடுத்தடுத்த பருவங்களில் அவனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சுட்டப்படுகின்றன.

பெருங்கனவு - கணேஷ் சுப்ரமணி


கண்முன் அலையும் காலமும்
காலத்தைப் பேசும் வரலாறும்
பேரண்டத்தின் அகல்வெளிகளும்
அதன் இடுக்குகளில்
ஒளிந்திருக்கும் கடவுள்களும்
மற்றுமுள்ள
நீயும்
நானும்
அவர்களும்