ஆழ்துளைச் சமூகத்தில் அறம் - கணேஷ் சுப்ரமணி

அறம்: இரண்டாயிரமாண்டு தமிழ்ச் சொல். இச்சொல் காலந்தோறும் மாறுபடும் தனக்கான பொருண்மையைக் களைந்து தன்னுடைய இருத்தலைத் தேடி வரலாற்றில் தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கிறது. இப்படியொரு சொல்லை சினிமாவுக்குத் தலைப்பாக்கிக் கொண்டதற்கான அடிப்படை நியாயத்தை நிறைவேற்றியிருக்கிறது கோபி நயினாரின் அறம்.

தரிசனம் - கணேஷ் சுப்ரமணி

கோயிலுக்குள்
இருபது ரூபாய் தந்தேன்.
கடவுள் தெரிந்தார்.

கோயில் வாசலில்
இருபது ரூபாய் தந்தேன்
கடவுளாகத் தெரிந்தேன்.

மூன்றாம் விடுதலைப் போர் - கணேஷ் சுப்ரமணி

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை இப்படிச் சொல்வதில் தவறில்லை. 1947க்கு முன்னர் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக நடந்த இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் சமூக விடுதலையடையாமல் அரசியல் விடுதலையால் பயனில்லை என்று பெரியார் இந்திய நாட்டின் சுதந்திர நாளைப் புறக்கணித்தார். அது அரசியல் விடுதலைப் போர். பின்னர் சுதந்திர இந்தியாவில் மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக 1965இல் மொழி விடுதலைப் போரை நிகழ்த்தி வெற்றி பெற்ற வரலாறு நமக்குண்டு. தற்போது பண்பாட்டு விடுதலைப் போர் ஒன்றை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு இளைஞர்கள்; குறிப்பாக மாணவர்கள்.

அந்திமம் - கணேஷ் சுப்ரமணி

இன்னும் மீதமிருக்கும்
மரங்களால்
பிழைத்திருக்கிறது பூமி

ஜீன்ஸ் புரட்சி - கணேஷ் சுப்ரமணி

அவர்கள் பின்னால் நடிகர்கள் இல்லை; அரசியல் கட்சிகள் இல்லை; ஊடகங்களும் பெரிய அளவில் இல்லை; ஆனால் அவர்களின் முழக்கங்கள் தமிழ்நாடு முழுக்க ஒரே குரலாக எதிரொலிக்கிறது. இது எப்படி சாத்தியமானது? மெரினாவில் போராடிய இளைஞர்களைக் கலைப்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. எங்கும் இருள் சூழ்ந்த போது அவர்களின் செல்போன்களின் ‘பிளாஷ் லைட்கள்’ ஒளிரத் தொடங்கின. தங்கள் செய்தியை அதின் மூலம் அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்: ‘எங்களுக்கு யாரும் தேவையில்லை; எங்கள் கையில் இருக்கும் செல்போன்கள் போதும்’

அப்பா: ஓர் அலசல் - கணேஷ் சுப்ரமணி

இயக்குநர் சமுத்திரக்கனியின் 'அப்பா' எனும் திரைப்படம் கல்வி பற்றிப் பேசுகிறது. சமீப காலத்தில் சாட்டை, நண்பன், தங்க மீன்கள் போன்ற படங்கள் நம் கல்வி முறை குறித்த விமர்சனங்களை முன்வைத்தன. சமுத்திரக்கனியும் கல்வி குறித்து நீண்ட காலமாகத் இந்திய மற்றும் தமிழ்ச் சூழலில் முற்போக்குவாதிகளால் அலசப்பட்டு வரும் சிந்தனைகளை இப்படத்தின் மூலம் முன்வைக்கிறார்.