இருட்டில் சமச்சீர்க் கல்வி - கணேஷ் சுப்ரமணி

முந்தைய தி.மு.க. அரசு செய்த உருப்படியான ஒன்றிரண்டு சாதனைகளுள் ஒன்று சமச்சீர்க்கல்வி. தமிழ்நாட்டில் ஏழை மாணவனுக்கு ஒரு விதமான கல்வி; பணக்கார மாணவனுக்கு வேறு விதமான கல்வி என்றிருக்கும் நிலை மாறுவதற்கான ஒரு சிறு முயற்சியாக உருவான சமச்சீர்க் கல்வி, தனியார் கல்வியை மையப்படுத்தி உருவாகியிருந்த அதிகார மையங்களை எரிச்சலைடைய வைத்தது.

காலங்களில் அவர் வசந்தம் - கணேஷ் சுப்ரமணி

கர்ணன் படத்தில் இடம் பெற்ற 'மழை கொடுக்கும் கொடை' எனும் பாடலை அடிக்கடி விரும்பிக் கேட்பதுண்டு. அக்காலத்தின் பின்னணிப் பாடல் ஜாம்பவான்கள் டி.எம்.சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இருவரின் குரல்களும் அப்பாடலில் மிகுந்த கம்பீரத்துடன் ஒலிக்கும். இசையின் நடுவில் உறையும் மவுனத்தைப் போல அந்தக் வெண்கலக் குரல்களின் நடுவில் மென்மையாய் ஈர்க்கும் ஓர் ஆண் குரல். அது பி.பி.சீனிவாஸினுடையது.

ஈரம்


என் இதயத்திலிருந்து
ஈரம் வடிகிறது.
இப்போது 

அவள் குளிக்கிறாள்.

வாசம்


உன் பெயரை
எழுதிய பக்கங்களில்
சில மலர்களின் வாசம்!

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 3 - கணேஷ் சுப்ரமணி

அணிதலும் களை(த்)தலும்:
சங்க காலப் பெண்கள் தங்கள் தோற்றத்துக்குப் பொலிவூட்டும் வகையில் வித விதமான ஆடை, அணிகலன்களை அணிந்ததாகச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. பஞ்சு, பட்டு, விலங்குகளின் மயிர் போன்றவற்றாலான அழகான ஆடைகளை அணிந்தனர். பலவிதமான கைவளைகள், மோசை எனும் மரகதக் கடைசெறி, பொன்னாலான சங்கிலிகள், பொன் ஞாண், காதணிகள், இடையில் மேகலை போன்றவற்றைப் பெண்கள் விரும்பி அணிந்ததாகத் தெரிகிறது.

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 2 - கணேஷ் சுப்ரமணி

சங்க இலக்கியத்தில் உடனுயிர் மாய்தல்:
சங்க இலக்கியங்களில் உடன்கட்டை ஏறுதல் மற்றும் கைம்மை நோன்பு நோற்றல் குறித்த செய்திகள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் உடனுயிர் மாய்தல் குறித்த செய்திகள் அரிதாகவே காணக்கிடைக்கின்றன. போர்க்களத்தில் இறந்துபட்ட சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் மற்றும் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி ஆகிய மன்னர்களின் மனைவியர், தத்தம் கணவர்களின் மார்பில் வீழ்ந்து உயிர் மாண்டதாகப் புறநானூற்றில் ஒரு பாடலில் கூறப்படுகிறது.

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 1 - கணேஷ் சுப்ரமணி

மனிதன் சாவை நாடும் மனநிலையும் சூழலும் தனித்துவம் வாய்ந்தவை. ‘உலகின் முக்கியப் பிரச்சினையே தற்கொலைதான்’ என்றார் ஆல்பர்ட் காம்யூ. ஒரு மனிதன், தன்னுடைய சாவை விழைந்து ஏற்பதற்குத் தனிப்பட்ட மனநிலை மட்டுமின்றி, அவன் வாழும் சமூகத்தின் நிர்ப்பந்தமும் முக்கியக் காரணமாகின்றது. அதாவது, ஒரு மனிதன் தன்னுடைய சாவை நாடிச் செல்வது தனிமனிதப் பிரச்சினையன்று; சமூகப் பிரச்சினை. சங்க இலக்கியத்தின் சில இடங்களில் அக்கால மகளிர் தங்களுடைய சாவை விரும்பி ஏற்றுக்கொள்ளும் விதமான நிகழ்வுகளைக் காணமுடிகிறது. சடங்கு வயப்பட்ட இந்நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள சமூக அசைவியக்கத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.