இணைய வெளியில் ஆசிரியர்கள் - கணேஷ் சுப்ரமணி


சட்டென்று மாறிய வானிலையைப் போல் கொரோனா காலம் கல்விச் சூழலை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. ஆசிரியர்களைச் சற்று விலகியிருக்கச் சொல்லிவிட்டு, தொழில்நுட்பம் கல்விப்பணியைக் கையிலெடுக்கிறது. இது ஒன்றும் திடீர் மாற்றமில்லைதான். தொன்னூறுகளில் கல்விப் பணிகளில் கணினி பயன்படத் தொடங்கிய போதே இந்தச் சூழ்நிலை வெளித் தெரியாமல் கருக்கொண்டு விட்டது. இணையப் பயன்பாடு பரவலாகத் தொடங்கிய இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின்னர் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் கல்வியில் மேலோங்கியது.