பெருங்கனவு - கணேஷ் சுப்ரமணி


கண்முன் அலையும் காலமும்
காலத்தைப் பேசும் வரலாறும்
பேரண்டத்தின் அகல்வெளிகளும்
அதன் இடுக்குகளில்
ஒளிந்திருக்கும் கடவுள்களும்
மற்றுமுள்ள
நீயும்
நானும்
அவர்களும்


இந்தக் கவிதையும்
இன்னும் எந்தக் கவிதையிலும்
சொல்லப்படாத எல்லாமும்
யுகக் கணக்கில் அசைவற்று உறங்கும்
இனம் புரியாத
விசித்திர மிருகத்தின்
பெருங்கனவாய்க் கூட இருக்கலாம்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்