அன்னக்கிளிக்கு வயது ஐம்பது. 1976ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் ஐம்பதாண்டு கால இசைப்பயணம் இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தொலைதூரப் பயணங்களிலும், துயரங்களிலும், கொண்டாட்டங்களிலும், காதலுணர் பொழுதுகளிலும் இளையராஜா என்றும் தேவையானவராக இருக்கிறார்.
இளையராஜா 50 - கணேஷ் சுப்ரமணி
'அலைவாய்க் கரையில்' நாவலில் நெய்தல் நிலம்
டிராகன் - கணேஷ் சுப்ரமணி
கல்லூரியைக் களமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. ஆனால் அசலான கல்லூரி வாழ்க்கையை இவை தொட்டுக் கூட பார்ப்பதில்லை. எந்தக் கிரகத்திலும் இல்லாத கல்லூரிகள்தான் சினிமாவில் காட்டப்பட்டு வந்துள்ளன. அதிலும் நாற்பத்தைந்து வயதைக் கடந்த கதாநாயகர்களும் தலையில் விக்குடன் கல்லூரிக்குப் போகும் காட்சியைக் காணும் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் நம் ரசிகர்கள். இப்போ சொல்ல வந்தது அதுவல்ல. சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற டிராகன் திரைப்படம் பற்றி.
தகவல் மாசுபாடு - கணேஷ் சுப்ரமணி
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தைத் தகவல் யுகம் என்கிறோம். ஒவ்வொரு நொடியும் நம் தேவைக்கும் அதிகமான தகவல்கள் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. தகவல்களால் சூழப்பட்டு, தகவல்களால் ஆளப்பட்டு, தகவல்களாகவே மாறிக் கொண்டிருக்கிறோம். ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் நாம் பார்வையிடும் ஒரு விடயம், அடுத்த நொடி நாம் பயன்படுத்தும் அனைத்து செயலிகளிலும் நம் முன்னால் ஒளிர்கிறது. நம்முடைய விருப்பங்களும் சிந்தனைகளும் ஒரு சொடுக்கில் (click) தகவல்களாக மாறி நிறுவனங்களின் பயன்பாட்டுக்குச் சென்று நம்மிடம் திரும்பி வருகிறது. அதாவது யாரோ ஒருவரின் தேவைக்கான தகவல்களாக நாம் மாறுகிறோம்.
திகட்டத் திகட்ட வாழ்ந்தவர்களின் கதை - கணேஷ் சுப்ரமணி
90s kids என்றோர் இனமுண்டு. அதைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. அதற்குச் சற்று முன் வாழ்ந்த இன்னோர் இனமுண்டு. அதற்கு ‘90s teens’ என்று பெயர் வைக்கலாம். கிரேக்கப் புராணத்தில் வரும் சிசிபஸ், காரண காரியத் தொடர்பின்றி ஒரு பெரிய கல்லை மலைமேல் ஏற்றிச் செல்வதைப் போல பழைய நினைவுகள் எனும் தாங்க முடியாத பெரும் பாரத்தைச் சுமந்து திரிபவர்கள்தான் இந்த 90s teens. மாற்றம் ஒன்றே மாறாதது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்; எல்லாக் காலத்திலும் நிகழ்வதுதான். ஆனால் கண்முன்னால் சகிக்க முடியாத வேகத்தில் நிகழும் மாற்றத்தைக் கண்டு உலர்ந்து போயிருக்கும் ஒரு தலைமுறை என்று இவர்களைச் சொல்லலாம்.
மாமன்னன்: எதிர்வினைகளும் எதிர்பாராத வினைகளும் - கணேஷ் சுப்ரமணி
மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்துக்கு நிகழ்ந்த எதிர்வினைகளை, படம் வெளியாவதற்கு முன், திரையரங்கில் வெளியான பின், ஓடிடி தளத்தில் வெளியான பின் என்று மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்த்துத் தமிழ்ச் சமூகத்தின் பொது உளநிலையை அலசலாம். இந்த எதிர்வினைகளின் பின்னால் உள்ள உளவியல் பெரும்பாலும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாததும்தான். அதைப் பற்றிக் கடைசியில் பேசலாம். அதற்கு முன் படத்தைப் பார்க்கலாம்.
காட்டு மல்லி வாசம் - கணேஷ் சுப்ரமணி
வெற்றிமாறனின் விடுதலை படத்துக்காக இளையராஜாவின் இசையில் மூன்று பாடல்கள் வெளியாகி பலரையும் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக
இளையராஜா பாடியிருக்கும் ‘காட்டு மல்லி’ பாடலில் ஏதோவொரு வசீகரம் இருப்பதாக ராஜாவின் ரசிகர்கள்
சிலாகித்துப் போயிருக்கிறார்கள். இந்தக் காட்டு மல்லி பாடலைப் பற்றி சாரு
நிவேதிதாவின் பதிவொன்றைக் கண்டேன். மனிதருக்கு இளையராஜா மீது ஏன் இத்தனை வெறுப்பு
என்று தெரியவில்லை. அந்தப் பாடலைக் கேட்டு மிகவும் நொந்து போய் மிகுந்த மன
உளைச்சலில் இருக்கிறாராம். சாருவின் மற்ற பதிவுகளில் ராஜாவைப் பற்றித் தேடிப்
படித்துப் பார்த்தால் எல்லாவற்றிலுமே இளையராஜாவைத் திட்டியிருக்கிறார். ஒரு
பதிவில் அதற்குக் காரணமும் சொல்லியிருக்கிறார். பாப் மார்லி, கத்தார் ஆகியோரைக் குப்பை
என்று இளையராஜா திட்டியிருக்கிறாராம். அவர்களின் இசை ராஜாவுக்குப் பிடிக்கவில்லை
என்றால் அவர் விமர்சிக்கக் கூடாதா?
பிடிக்காதவர்களைத் திட்டும்
உரிமை சாருவுக்கு மட்டும்தான் சொந்தமா?