திருக்குறளில் தெய்வம் - கணேஷ் சுப்ரமணி

சங்க காலத்துக்குச் சற்று பிந்தைய காலத்தில் தோன்றிய திருக்குறளில் எந்தவொரு கடவுட் கோட்பாட்டையும் வள்ளுவர் பின்பற்றவில்லை. எனவேதான் ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்தவரும் அவரைத் தங்கள் சமயத்தவர் என்று உரிமை கோருகிறார்கள். அந்த அளவுக்கு சமயப் பொதுமையைப் பேணியுள்ளதால்தான் திருக்குறள் உலகப் பொதுமறையாக மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதுப்புது விளக்கங்களை அளிக்கக் கூடிய செறிவு அதனுள் உண்டு.

ராசா மகன் - கணேஷ் சுப்ரமணி

தொன்னூறுகளில் தொடக்கத்தில் இசையில் மெல்ல நிகழத் தொடங்கியிருந்த மாற்றங்கள் இசை ரசிகர்களுக்குத் தெரியும். இசை நவீனமாதலின் அடுத்த கட்ட நகர்வின் தேவை உருவாகியிருந்தது. தமிழ் சினிமாவில் தனிப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்த இளையராஜாவும் இதை உணர்ந்திருந்தார். நவீனத் தொழில்நுட்பங்களைத் தன் இசையில் அவர் அறிமுகப்படுத்துவதும் கையாளுவதும் அந்த மாற்றத்துக்கான அவருடைய முயற்சிகளாக இருந்தன. ஆனால் ரகுமானின் அதிரடியான வரவு

இளையராஜா 50 - கணேஷ் சுப்ரமணி

அன்னக்கிளிக்கு வயது ஐம்பது. 1976ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் ஐம்பதாண்டு கால இசைப்பயணம் இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தொலைதூரப் பயணங்களிலும், துயரங்களிலும், கொண்டாட்டங்களிலும், காதலுணர் பொழுதுகளிலும் இளையராஜா என்றும் தேவையானவராக இருக்கிறார்.

டிராகன் - கணேஷ் சுப்ரமணி

கல்லூரியைக் களமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. ஆனால் அசலான கல்லூரி வாழ்க்கையை இவை தொட்டுக் கூட பார்ப்பதில்லை. எந்தக் கிரகத்திலும் இல்லாத கல்லூரிகள்தான் சினிமாவில் காட்டப்பட்டு வந்துள்ளன. அதிலும் நாற்பத்தைந்து வயதைக் கடந்த கதாநாயகர்களும் தலையில் விக்குடன் கல்லூரிக்குப் போகும் காட்சியைக் காணும் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் நம் ரசிகர்கள். இப்போ சொல்ல வந்தது அதுவல்ல. சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற டிராகன் திரைப்படம் பற்றி.

தகவல் மாசுபாடு - கணேஷ் சுப்ரமணி

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தைத் தகவல் யுகம் என்கிறோம். ஒவ்வொரு நொடியும் நம் தேவைக்கும் அதிகமான தகவல்கள் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. தகவல்களால் சூழப்பட்டு, தகவல்களால் ஆளப்பட்டு, தகவல்களாகவே மாறிக் கொண்டிருக்கிறோம். ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் நாம் பார்வையிடும் ஒரு விடயம், அடுத்த நொடி நாம் பயன்படுத்தும் அனைத்து செயலிகளிலும் நம் முன்னால் ஒளிர்கிறது. நம்முடைய விருப்பங்களும் சிந்தனைகளும் ஒரு சொடுக்கில் (click) தகவல்களாக மாறி நிறுவனங்களின் பயன்பாட்டுக்குச் சென்று நம்மிடம் திரும்பி வருகிறது. அதாவது யாரோ ஒருவரின் தேவைக்கான தகவல்களாக நாம் மாறுகிறோம்.

திகட்டத் திகட்ட வாழ்ந்தவர்களின் கதை - கணேஷ் சுப்ரமணி

90s kids என்றோர் இனமுண்டு. அதைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. அதற்குச் சற்று முன் வாழ்ந்த இன்னோர் இனமுண்டு. அதற்கு ‘90s teens’ என்று பெயர் வைக்கலாம். கிரேக்கப் புராணத்தில் வரும் சிசிபஸ், காரண காரியத் தொடர்பின்றி ஒரு பெரிய கல்லை மலைமேல் ஏற்றிச் செல்வதைப் போல பழைய நினைவுகள் எனும் தாங்க முடியாத பெரும் பாரத்தைச் சுமந்து திரிபவர்கள்தான் இந்த 90s teens. மாற்றம் ஒன்றே மாறாதது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்; எல்லாக் காலத்திலும் நிகழ்வதுதான். ஆனால் கண்முன்னால் சகிக்க முடியாத வேகத்தில் நிகழும் மாற்றத்தைக் கண்டு உலர்ந்து போயிருக்கும் ஒரு தலைமுறை என்று இவர்களைச் சொல்லலாம்.

மாமன்னன்: எதிர்வினைகளும் எதிர்பாராத வினைகளும் - கணேஷ் சுப்ரமணி

மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்துக்கு நிகழ்ந்த எதிர்வினைகளை, படம் வெளியாவதற்கு முன், திரையரங்கில் வெளியான பின், ஓடிடி தளத்தில் வெளியான பின் என்று மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்த்துத் தமிழ்ச் சமூகத்தின் பொது உளநிலையை அலசலாம். இந்த எதிர்வினைகளின் பின்னால் உள்ள உளவியல் பெரும்பாலும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாததும்தான். அதைப் பற்றிக் கடைசியில் பேசலாம். அதற்கு முன் படத்தைப் பார்க்கலாம்.

காட்டு மல்லி வாசம் - கணேஷ் சுப்ரமணி

வெற்றிமாறனின் விடுதலை படத்துக்காக இளையராஜாவின் இசையில் மூன்று பாடல்கள் வெளியாகி பலரையும் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக இளையராஜா பாடியிருக்கும் ‘காட்டு மல்லி’ பாடலில் ஏதோவொரு வசீகரம் இருப்பதாக ராஜாவின் ரசிகர்கள் சிலாகித்துப் போயிருக்கிறார்கள். இந்தக் காட்டு மல்லி பாடலைப் பற்றி சாரு நிவேதிதாவின் பதிவொன்றைக் கண்டேன். மனிதருக்கு இளையராஜா மீது ஏன் இத்தனை வெறுப்பு என்று தெரியவில்லை. அந்தப் பாடலைக் கேட்டு மிகவும் நொந்து போய் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். சாருவின் மற்ற பதிவுகளில் ராஜாவைப் பற்றித் தேடிப் படித்துப் பார்த்தால் எல்லாவற்றிலுமே இளையராஜாவைத் திட்டியிருக்கிறார். ஒரு பதிவில் அதற்குக் காரணமும் சொல்லியிருக்கிறார். பாப் மார்லி, கத்தார் ஆகியோரைக் குப்பை என்று இளையராஜா திட்டியிருக்கிறாராம். அவர்களின் இசை ராஜாவுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் விமர்சிக்கக் கூடாதா? பிடிக்காதவர்களைத் திட்டும் உரிமை சாருவுக்கு மட்டும்தான் சொந்தமா?

அடங்க மறுத்த முதல் சிறுத்தை - கணேஷ் சுப்ரமணி

    

உழைக்கும் மக்களால்தான் வரலாறு நகர்கிறது. ஆனால் இந்திய நிலைமையில் வரலாறு என்று எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இல்லை. அவர்களின் பாத்திரம் மறைக்கப்பட்டோ அல்லது திரிக்கப்பட்டோதான் வரலாற்றுக் கதைகள் எழுதப்படுகின்றன. அதிலும் குறிப்பாகப் பட்டியல் இன மக்களுக்கு வரலாறு என்பதே மறுக்கப்பட்ட ஒன்றுதான். சாதியக் கட்டுமானத்தின் அடுக்குகள் எல்லாமும் ஒடுக்குமுறைகளால் நிரம்பியவை.

பொன்னியின் செல்வன் - 1

 'பொன்னியின் செல்வன்’ நேற்றுதான் பார்த்தேன். படத்தைப் பார்க்கும் போது உணர்ந்த விஷயங்கள்:

1. மகிழ்மதிக்கும் சோழநாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாட்டின் மேல் மன்னர்களுக்கு இருக்கும் ஆசை, மோகம், வெறி எல்லாம் அக்கறை, அன்பு, பற்று என்றே காட்டப்படுகிறது. ரசிகர்களாலும் அவ்வாறே புரிந்து கொள்ளப்படுகிறது. (உடனே ‘பாகுபலியையும் பொன்னியின் செல்வனையும் எப்படி ஒப்பிடலாம்? அது கற்பனை, இது வரலாறு’ என்றெல்லாம் சொல்ல வேணாம். இரண்டுமே புனைவுதான்.)

தாய்க்குருவி - கணேஷ் சுப்ரமணி


லாரியில் மரம்

வாயில் இரையுடன்

தாய்க்குருவி

தமிழ் நாடகம்: அன்றும் இன்றும் (உரை) - கணேஷ் சுப்ரமணி

 


மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெண் கல்விச் சிந்தனைகள் - கணேஷ் சுப்ரமணி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதிக் காலம் முதல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலகட்டம் இந்தியச் சமூகச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கு முந்தைய காலகட்டத்தின் மதிப்பீடுகள் பெரும் சிதைவுகளையும், மாற்றங்களையும் சந்தித்த காலம் அது. வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களின் ஆதிக்கம், கிறித்தவச் சமயப் பரவல் போன்றவற்றால் இங்கு கல்வி முறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. காலங்காலமாக இருந்து வந்த வேதக் கல்வி, குருகுலக் கல்வி போன்றவை மாற்றம் பெற்றன. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான ஒன்றாக இருந்த பார்வையும் மாறத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வி கற்ற சில இந்தியர்களால் புதிய கல்விச் சிந்தனைகள் மலர்ந்தன. தமிழ்ச் சூழலில் இப்புதிய சிந்தனைகளைப் பேரூற்றாகப் பெருக்கெடுக்கச் செய்தவர் பாரதியார். குறிப்பாகப் பெண் கல்வி குறித்த அவருடைய சிந்தனைகள் அன்றையச் சூழலில் மரபுகளை மீறியதாகவும் எதிர்காலச் சிந்தனைகளின் முன்னறிவிப்பாகவும் இருந்தன. ஆனால் அவருக்கு முன்பே தமிழ் மரபுகளிலிருந்து விலகாமல் பெண் கல்வி குறித்த சிந்தனைகளை முன்வைத்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

நூல்கள்: வாசிக்க, நேசிக்க, சுவாசிக்க.. (நேர்காணல்) கணேஷ் சுப்ரமணி


இருத்தலிய உளப்பகுப்பாய்வு நோக்கில் தமிழ் நாவல்கள் - உரை - கணேஷ் சுப்ரமணி


ஒரு நண்பனின் மரணம் - கணேஷ் சுப்ரமணி

நள்ளிரவுக்கு நிமிடங்கள் மீதமிருக்கும்

ஓர் அகால வேளையில் குற்றொலியுடன்

அலைபேசித் திரையில் வந்து சேர்ந்தது

நண்பனின் மரணம்.

பத்மாவத் (இந்தி) - கணேஷ் சுப்ரமணி

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, திரைக்கலையின் உச்சபட்சங்களைத் தொடக் கூடியவர். கருத்தியல் நிலையில் பார்த்தால் அவரின் படங்கள் (பிளாக் எனும் திரைப்படத்தைத் தவிர) இந்தியாவின் பண்பாடு குறித்த பழம் பெருமிதங்களைப் பேசுபவை. மிகுந்த சர்ச்சைகளுடன் வெளிவந்த பத்மாவத் திரைப்படமும் அப்படியானதுதான்.

கடவுளற்ற உலகம் - கணேஷ் சுப்ரமணி


தன்னை நோக்கி வரும்
அவலக் குரல்களுக்குக்
காதை மூடிக்கொள்ளும்
கடவுள்களின் முகம்
காணச் சகிக்கவில்லை.
அவர்கள் படைத்த உலகமும்
அப்படித்தான் இருக்கிறது.
கடவுளற்ற உலகத்தைப்
படைக்க

மனிதர்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்திரணின் ராணி: அவதாரங்களும் அதிகாரங்களும் - கணேஷ் சுப்ரமணி

            வினோத் மலைச்சாமியின் இந்திரணின் ராணி குறும்படம், நால் வருணப் படைகளுக்கு எதிராக அவ்வருணங்களின் வரையறைகளில் இடமளிக்கப்படாத வருணமற்ற சாதியினரின் குரலாக ஒலிக்கிறது.

பிறப்பு கொண்டு ஏற்றத்தாழ்வைப் போதிக்கும் வருண அமைப்பில் நான்கு வருணங்களும் தங்களுக்குள் அதிகாரத்திற்கான மோதலை நிகழ்த்தியபடியே இருக்கின்றன. வருணங்களுக்குள் இல்லாத வருணம் அற்ற சாதியினருக்கு எதிரானதாகவும் அவர்களை அதிகாரப் போட்டியின் வரம்புக்குள்ளேயே கொண்டு வந்துவிடக் கூடாது என்கிற கவனமும் இந்த வருண மோதல்களின் இணைப் போக்காக வரலாற்றில் தொடர்ந்து வந்திருக்கிறது.