Showing posts with label திரை. Show all posts
Showing posts with label திரை. Show all posts

ராசா மகன் - கணேஷ் சுப்ரமணி

தொன்னூறுகளில் தொடக்கத்தில் இசையில் மெல்ல நிகழத் தொடங்கியிருந்த மாற்றங்கள் இசை ரசிகர்களுக்குத் தெரியும். இசை நவீனமாதலின் அடுத்த கட்ட நகர்வின் தேவை உருவாகியிருந்தது. தமிழ் சினிமாவில் தனிப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்த இளையராஜாவும் இதை உணர்ந்திருந்தார். நவீனத் தொழில்நுட்பங்களைத் தன் இசையில் அவர் அறிமுகப்படுத்துவதும் கையாளுவதும் அந்த மாற்றத்துக்கான அவருடைய முயற்சிகளாக இருந்தன. ஆனால் ரகுமானின் அதிரடியான வரவு

இளையராஜா 50 - கணேஷ் சுப்ரமணி

அன்னக்கிளிக்கு வயது ஐம்பது. 1976ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் ஐம்பதாண்டு கால இசைப்பயணம் இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தொலைதூரப் பயணங்களிலும், துயரங்களிலும், கொண்டாட்டங்களிலும், காதலுணர் பொழுதுகளிலும் இளையராஜா என்றும் தேவையானவராக இருக்கிறார்.

டிராகன் - கணேஷ் சுப்ரமணி

கல்லூரியைக் களமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. ஆனால் அசலான கல்லூரி வாழ்க்கையை இவை தொட்டுக் கூட பார்ப்பதில்லை. எந்தக் கிரகத்திலும் இல்லாத கல்லூரிகள்தான் சினிமாவில் காட்டப்பட்டு வந்துள்ளன. அதிலும் நாற்பத்தைந்து வயதைக் கடந்த கதாநாயகர்களும் தலையில் விக்குடன் கல்லூரிக்குப் போகும் காட்சியைக் காணும் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் நம் ரசிகர்கள். இப்போ சொல்ல வந்தது அதுவல்ல. சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற டிராகன் திரைப்படம் பற்றி.

திகட்டத் திகட்ட வாழ்ந்தவர்களின் கதை - கணேஷ் சுப்ரமணி

90s kids என்றோர் இனமுண்டு. அதைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. அதற்குச் சற்று முன் வாழ்ந்த இன்னோர் இனமுண்டு. அதற்கு 90s teens’ என்று பெயர் வைக்கலாம். கிரேக்கப் புராணத்தில் வரும் சிசிபஸ், காரண காரியத் தொடர்பின்றி ஒரு பெரிய கல்லை மலைமேல் ஏற்றிச் செல்வதைப் போல பழைய நினைவுகள் எனும் தாங்க முடியாத பெரும் பாரத்தைச் சுமந்து திரிபவர்கள்தான் இந்த 90s teens. மாற்றம் ஒன்றே மாறாதது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்; எல்லாக் காலத்திலும் நிகழ்வதுதான். ஆனால் கண்முன்னால் சகிக்க முடியாத வேகத்தில் நிகழும் மாற்றத்தைக் கண்டு உலர்ந்து போயிருக்கும் ஒரு தலைமுறை என்று இவர்களைச் சொல்லலாம்.

மாமன்னன்: எதிர்வினைகளும் எதிர்பாராத வினைகளும் - கணேஷ் சுப்ரமணி

மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்துக்கு நிகழ்ந்த எதிர்வினைகளை, படம் வெளியாவதற்கு முன், திரையரங்கில் வெளியான பின், ஓடிடி தளத்தில் வெளியான பின் என்று மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்த்துத் தமிழ்ச் சமூகத்தின் பொது உளநிலையை அலசலாம். இந்த எதிர்வினைகளின் பின்னால் உள்ள உளவியல் பெரும்பாலும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாததும்தான். அதைப் பற்றிக் கடைசியில் பேசலாம். அதற்கு முன் படத்தைப் பார்க்கலாம்.

காட்டு மல்லி வாசம் - கணேஷ் சுப்ரமணி

வெற்றிமாறனின் விடுதலை படத்துக்காக இளையராஜாவின் இசையில் மூன்று பாடல்கள் வெளியாகி பலரையும் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக இளையராஜா பாடியிருக்கும் காட்டு மல்லி பாடலில் ஏதோவொரு வசீகரம் இருப்பதாக ராஜாவின் ரசிகர்கள் சிலாகித்துப் போயிருக்கிறார்கள். இந்தக் காட்டு மல்லி பாடலைப் பற்றி சாரு நிவேதிதாவின் பதிவொன்றைக் கண்டேன். மனிதருக்கு இளையராஜா மீது ஏன் இத்தனை வெறுப்பு என்று தெரியவில்லை. அந்தப் பாடலைக் கேட்டு மிகவும் நொந்து போய் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். சாருவின் மற்ற பதிவுகளில் ராஜாவைப் பற்றித் தேடிப் படித்துப் பார்த்தால் எல்லாவற்றிலுமே இளையராஜாவைத் திட்டியிருக்கிறார். ஒரு பதிவில் அதற்குக் காரணமும் சொல்லியிருக்கிறார். பாப் மார்லி, கத்தார் ஆகியோரைக் குப்பை என்று இளையராஜா திட்டியிருக்கிறாராம். அவர்களின் இசை ராஜாவுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் விமர்சிக்கக் கூடாதா? பிடிக்காதவர்களைத் திட்டும் உரிமை சாருவுக்கு மட்டும்தான் சொந்தமா?

பொன்னியின் செல்வன் - 1

 'பொன்னியின் செல்வன்’ நேற்றுதான் பார்த்தேன். படத்தைப் பார்க்கும் போது உணர்ந்த விஷயங்கள்:

1. மகிழ்மதிக்கும் சோழநாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாட்டின் மேல் மன்னர்களுக்கு இருக்கும் ஆசை, மோகம், வெறி எல்லாம் அக்கறை, அன்பு, பற்று என்றே காட்டப்படுகிறது. ரசிகர்களாலும் அவ்வாறே புரிந்து கொள்ளப்படுகிறது. (உடனே ‘பாகுபலியையும் பொன்னியின் செல்வனையும் எப்படி ஒப்பிடலாம்? அது கற்பனை, இது வரலாறு’ என்றெல்லாம் சொல்ல வேணாம். இரண்டுமே புனைவுதான்.)

பத்மாவத் (இந்தி) - கணேஷ் சுப்ரமணி

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, திரைக்கலையின் உச்சபட்சங்களைத் தொடக் கூடியவர். கருத்தியல் நிலையில் பார்த்தால் அவரின் படங்கள் (பிளாக் எனும் திரைப்படத்தைத் தவிர) இந்தியாவின் பண்பாடு குறித்த பழம் பெருமிதங்களைப் பேசுபவை. மிகுந்த சர்ச்சைகளுடன் வெளிவந்த பத்மாவத் திரைப்படமும் அப்படியானதுதான்.

இந்திரணின் ராணி: அவதாரங்களும் அதிகாரங்களும் - கணேஷ் சுப்ரமணி

            வினோத் மலைச்சாமியின் இந்திரணின் ராணி குறும்படம், நால் வருணப் படைகளுக்கு எதிராக அவ்வருணங்களின் வரையறைகளில் இடமளிக்கப்படாத வருணமற்ற சாதியினரின் குரலாக ஒலிக்கிறது.

பிறப்பு கொண்டு ஏற்றத்தாழ்வைப் போதிக்கும் வருண அமைப்பில் நான்கு வருணங்களும் தங்களுக்குள் அதிகாரத்திற்கான மோதலை நிகழ்த்தியபடியே இருக்கின்றன. வருணங்களுக்குள் இல்லாத வருணம் அற்ற சாதியினருக்கு எதிரானதாகவும் அவர்களை அதிகாரப் போட்டியின் வரம்புக்குள்ளேயே கொண்டு வந்துவிடக் கூடாது என்கிற கவனமும் இந்த வருண மோதல்களின் இணைப் போக்காக வரலாற்றில் தொடர்ந்து வந்திருக்கிறது.

பாரம்: சுமையாகும் சுமைதாங்கிகளின் கதை - கணேஷ் சுப்ரமணி


குடும்பம் என்பது தனிச்சொத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பொருளாதார ஒப்பந்த அமைப்பு. இந்தப் பொருளாதார ஒப்பந்தத்தைப் பராமரித்து சொத்துரிமையை ரத்த சம்பந்தத்திற்குள்ளேயே கடத்திச் செல்வதற்காக உருவானவையே உறவுகள் எனும் பழகுநிலைகள்.

அதாவது உறவுகள் உருவாவதிலும், நீடிப்பதிலும் பொருளாதாரம் முக்கியப் பங்காற்றுகிறது. ஒவ்வொரு உறவுக்கு இடையிலும் வெளியில் சொல்லப்படாத பொருளாதாரத் தொடர்பு உள்ளுறைந்து இருக்கிறது. சொல்லப்போனால் இந்தப் பொருளாதாரத் தொடர்புதான் குடும்ப அமைப்பைப் பலப்படுத்துகிறது; உறவுகளைப் பேணுகிறது.

சைக்கோ: கொலைகளின் உளவியல் - கணேஷ் சுப்ரமணி

நனவிலி மனத்தில் சிதைவுகளைக் கொண்டிருக்கும் ஒருவன் செய்யும் பெண் கொலைகள்தான் சைக்கோ படத்தின் கதை. தனக்கு உண்டான பாதிப்புகளுக்கான பதிலிச் செயல்களாக அவன் மற்றவர்களின் மரணத்தில் இன்பம் காண்கிறான். அதற்கான காரணங்களாக அவனுடைய குழந்தைப் பருவம் தொடங்கி அடுத்தடுத்த பருவங்களில் அவனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சுட்டப்படுகின்றன.

ஆழ்துளைச் சமூகத்தில் அறம் - கணேஷ் சுப்ரமணி

அறம்: இரண்டாயிரமாண்டு தமிழ்ச் சொல். இச்சொல் காலந்தோறும் மாறுபடும் தனக்கான பொருண்மையைக் களைந்து தன்னுடைய இருத்தலைத் தேடி வரலாற்றில் தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கிறது. இப்படியொரு சொல்லை சினிமாவுக்குத் தலைப்பாக்கிக் கொண்டதற்கான அடிப்படை நியாயத்தை நிறைவேற்றியிருக்கிறது கோபி நயினாரின் அறம்.

அப்பா: ஓர் அலசல் - கணேஷ் சுப்ரமணி

இயக்குநர் சமுத்திரக்கனியின் 'அப்பா' எனும் திரைப்படம் கல்வி பற்றிப் பேசுகிறது. சமீப காலத்தில் சாட்டை, நண்பன், தங்க மீன்கள் போன்ற படங்கள் நம் கல்வி முறை குறித்த விமர்சனங்களை முன்வைத்தன. சமுத்திரக்கனியும் கல்வி குறித்து நீண்ட காலமாகத் இந்திய மற்றும் தமிழ்ச் சூழலில் முற்போக்குவாதிகளால் அலசப்பட்டு வரும் சிந்தனைகளை இப்படத்தின் மூலம் முன்வைக்கிறார்.

பொக்கிஷத்தை மூடி விட்ட இறைவன் - கணேஷ் சுப்ரமணி

தமிழ் இசை உலகில் ஏராளமான ஆண் குரல்கள் ஒலித்திருக்கின்றன. ஆனால் ஆண்மைக் குரல்கள் அபூர்வம். திரையிசையில் சி.எஸ். ஜெயராமனின் குரலுக்கு அடுத்து ஒலித்த ஆண்மைக் குரலாக நாகூர் ஹனிபாவைச் சொல்லலாம். அந்த ஆண்மைக் குரல் தற்போது அடங்கியிருக்கிறது.

திசைமாறிய இசைப்புயல் - கணேஷ் சுப்ரமணி


தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் ஒரு புயலாய் உருவெடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படி ஒரு புயல் உருவாகத் தேவையான காலநிலை அப்போது இருந்தது. ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவலாய் ஒலித்த போதும் கூட இளையராஜாவின் இசைத் தாலாட்டில் சொக்கிப் போயிருந்த பலரும் அந்தப் படத்தின் இசையை எப்போதாவது ஒரு முறை நிகழ்ந்து மறையும் அதிசயம் (one time wonder) என்றே கூறினர். ஆனால் அந்த அதிசயம் தொடர்ந்தது. ‘ரோஜா’ படத்தின் இசை, தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையிசையே அடுத்த சில ஆண்டுகளுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

காலங்களில் அவர் வசந்தம் - கணேஷ் சுப்ரமணி

கர்ணன் படத்தில் இடம் பெற்ற 'மழை கொடுக்கும் கொடை' எனும் பாடலை அடிக்கடி விரும்பிக் கேட்பதுண்டு. அக்காலத்தின் பின்னணிப் பாடல் ஜாம்பவான்கள் டி.எம்.சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இருவரின் குரல்களும் அப்பாடலில் மிகுந்த கம்பீரத்துடன் ஒலிக்கும். இசையின் நடுவில் உறையும் மவுனத்தைப் போல அந்தக் வெண்கலக் குரல்களின் நடுவில் மென்மையாய் ஈர்க்கும் ஓர் ஆண் குரல். அது பி.பி.சீனிவாஸினுடையது.

சுருதி சேராத ஸ்ருதி

ஆறாம் அறிவைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்க்க வேண்டிய ஏழாம் அறிவு திரைப்படம் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஆனால் இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம் அந்த விவாதத்தைத் தொடருவதல்ல. அந்தப் படத்தில் அறிமுகமாகியுள்ள ஸ்ருதிஹாசன் ('உலக நாயகன்' கமலஹாசனின் மகள்) எனும் புகழ்பெற்ற வாரிசு நடிகையைப் பற்றியது.

கருப்புப் பணமும் வெள்ளித் திரையும்

சுவிஸ் வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் இந்தியர்களுடைய
பணத்தின் மதிப்பு இருபத்தைந்து லட்சம் முதல் எழுபத்தைந்து லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வந்தால் இங்குள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சுமார் பத்து கோடி வரை ஒதுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பவர்களுக்கே தெரியும்; அந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது என்பதும், கொண்டு வர மாட்டார்கள் என்பதும்.

நிக்காஹ் எனும் திருமணம்


தமிழ் சினிமாவில் இஸ்லாம் அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய சித்திரிப்புகள் எப்போதும் ஒரே மாதிரியான சாயலைக் கொண்டவை. அவை பெரும்பாலும் தீவிரவாதம், வன்முறை போன்றவற்றோடு இணைக்கப்பட்டிருக்கும். அல்லது மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதற்காக மிகையான நற்குணங்களுடன் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் பொதுவான பார்வையில் வீதிகளிலும், பொது இடங்களிலும் அருகில் நடமாடும் சாமானிய இஸ்லாமியர்களை பதட்டத்துடன் பார்க்கச் செய்யும் மனநிலையை உருவாக்குவதில் தீவிரத்துடன் இயங்கி வந்துள்ளன தமிழ்த் திரைப்படங்கள்.

மொழி

சிக்கலான தலைப்பை எளிதாகக் கையாண்டிருக்கும் படம். மொழி என்பது ஆய்வாளர்களுக்கு இன்னும் தீர்ந்துவிடாத புதிர். அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பான முதலீடு. தமிழ் சினிமாவுக்கோ வரிவிலக்கு பெற வசதியான மற்றுமொறு தமிழ்ப்பெயர்.

ராதா மோகனின் ‘மொழி’க்கு வருவோம். வாழ்வு குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாத இரண்டு மேல்தட்டு வர்க்க இளைஞர்களின் (படத்தின் தயாரிப்பாளர் என்பதால், பிரகாஷ்ராஜையும் இளைஞர் என்று இயக்குனரைப் போல பார்வையாளர்களும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.) சேஷ்டைகளுடன் தொடங்கும் கதை,