Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

தாய்க்குருவி - கணேஷ் சுப்ரமணி


லாரியில் மரம்

வாயில் இரையுடன்

தாய்க்குருவி

ஒரு நண்பனின் மரணம் - கணேஷ் சுப்ரமணி

நள்ளிரவுக்கு நிமிடங்கள் மீதமிருக்கும்

ஓர் அகால வேளையில் குற்றொலியுடன்

அலைபேசித் திரையில் வந்து சேர்ந்தது

நண்பனின் மரணம்.

கடவுளற்ற உலகம் - கணேஷ் சுப்ரமணி


தன்னை நோக்கி வரும்
அவலக் குரல்களுக்குக்
காதை மூடிக்கொள்ளும்
கடவுள்களின் முகம்
காணச் சகிக்கவில்லை.
அவர்கள் படைத்த உலகமும்
அப்படித்தான் இருக்கிறது.
கடவுளற்ற உலகத்தைப்
படைக்க

மனிதர்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

வனாந்திரம் - கணேஷ் சுப்ரமணி


பின்னிரவுப் பொழுதின்
அரைநிலா ஒளியில்
ஆளரவமற்ற
நெடுஞ்சாலையிலிருந்து
பிரிந்து செல்லும்
குறுஞ்சாலையில்
தனியே நடந்தேன்.

பதின் பருவத்தில்
இறந்துபோன சினேகிதியின்
உருவம் அருகில் அசைந்தது.
கூடவே
சலசலக்கும் காற்றின்
வினோத சத்தங்களின்
நடுவே சன்னமாய்க் கேட்டது
சின்னதாய் அழுகையொலி.

5

வேடிக்கை பார்ப்பவர்களை
இழந்துவிட்ட
சாலையோர மரங்களும்
கண்மாய்களும்
செல்போன்களைச்
சபிக்கின்றன.

முற்பொழுதுகளில்
தமக்கிருந்த பெருமதிப்பை
இழந்த
ஜன்னலோர இருக்கைகளும்
உடன் சேர்ந்து
முனகுகின்றன.

பெருங்கனவு - கணேஷ் சுப்ரமணி


கண்முன் அலையும் காலமும்
அலைந்ததைப் பேசும் வரலாறும்
பேரண்டத்தின் அகல்வெளிகளும்
அதன் இடுக்குகளில்
ஒளிந்திருக்கும் கடவுள்களும்
மற்றுமுள்ள
நீயும் நானும்
அவர்களும் அவைகளும்

4

கடவுளின் மோசமான
படைப்பு
மனிதன்

மனிதனின் அற்புதமான
படைப்பு
கடவுள்

3


உடல்
என்பது
வெறும்
உடல்தான்

2

திருடனைத்
திருடன் என்று
திருடர்களும்
சொல்வார்கள்

1

முடியவில்லை
என்பதன் அர்த்தம்
முயலவில்லை
என்பதே

பொள்ளாச்சி - கணேஷ் சுப்ரமணி

அடங்க மறுக்கும்
ஆண் குறிகள்
அறுபட வேண்டியவை

காதல் போற்றுதும் - கணேஷ் சுப்ரமணி

காற்றுடன் காதல் நிரம்பிய
வெளியெங்கும்
திகட்டத் திகட்டத்
திளைத்துத் திரியும்
உள்ளங்களால்
நிலைத்து நீடிக்கிறது
எல்லாமும்.

தரிசனம் - கணேஷ் சுப்ரமணி

கோயிலுக்குள்
இருபது ரூபாய் தந்தேன்.
கடவுள் தெரிந்தார்.

கோயில் வாசலில்
இருபது ரூபாய் தந்தேன்
கடவுளாகத் தெரிந்தேன்.

அந்திமம் - கணேஷ் சுப்ரமணி

இன்னும் மீதமிருக்கும்
மரங்களால்
பிழைத்திருக்கிறது பூமி

பாற்கடல் - கணேஷ் சுப்ரமணி

பெருங்கடலின்
சிற்றலைப் பரப்பில்
மீன் குஞ்சு தேடும்
தனிப்பறவை
நான்

விழுங்கும் திரை - கணேஷ் சுப்ரமணி


டிக்கெட் கிழித்து உள்ளே சென்றதும்
அனைத்தையும் விழுங்கும்
திரை

தமிழ்நாட்டை விழுங்கிய
திரையரங்கின் இருள்

ஏதோ ஒன்று - கணேஷ் சுப்ரமணி

நாலாம் தெரு ஜோதிமணியின் 
சாவுக்குப் போயிருந்தபோது
அவளைப் பார்க்க முடிந்தது.
பேச முடியவில்லை.

மூக்கைச் சீந்தி அழுத முகத்தையே
உற்றுப் பார்த்தேன்.
அவளும் பார்த்தாள் அவ்வப்போது.

இந்தியப் பெண் - கணேஷ் சுப்ரமணி


இந்தியா
அற்றை நாளில்
இது ஆண்களின் தேசம்.

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
கணவன் செத்ததும் மனைவியைத்
தீயில் தள்ளிச் சுட்டெரித்த தேசம்.

எங்கள் வீடு - கணேஷ் சுப்ரமணி

முன்பு எங்கள் வீட்டில்
நிறைய பேர் இருந்தார்கள்
தாத்தா, பாட்டி,
அப்பா, அம்மா,
சித்தி, சித்தப்பா,
பெரியம்மா, பெரியப்பா,
அண்ணன், அக்கா..,

அர்த்தங்கள் - கணேஷ் சுப்ரமணி


ஆண்கள்
இரட்டை அர்த்தத்தில்
பேசுகிறார்கள்.

பெண்கள்
இரண்டாயிரம் அர்த்தத்தில்
பேசுகிறார்கள்.