நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தைத் தகவல் யுகம் என்கிறோம். ஒவ்வொரு நொடியும் நம் தேவைக்கும் அதிகமான தகவல்கள் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. தகவல்களால் சூழப்பட்டு, தகவல்களால் ஆளப்பட்டு, தகவல்களாகவே மாறிக் கொண்டிருக்கிறோம். ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் நாம் பார்வையிடும் ஒரு விடயம், அடுத்த நொடி நாம் பயன்படுத்தும் அனைத்து செயலிகளிலும் நம் முன்னால் ஒளிர்கிறது. நம்முடைய விருப்பங்களும் சிந்தனைகளும் ஒரு சொடுக்கில் (click) தகவல்களாக மாறி நிறுவனங்களின் பயன்பாட்டுக்குச் சென்று நம்மிடம் திரும்பி வருகிறது. அதாவது யாரோ ஒருவரின் தேவைக்கான தகவல்களாக நாம் மாறுகிறோம்.
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
தகவல் மாசுபாடு - கணேஷ் சுப்ரமணி
அடங்க மறுத்த முதல் சிறுத்தை - கணேஷ் சுப்ரமணி
உழைக்கும் மக்களால்தான் வரலாறு நகர்கிறது. ஆனால் இந்திய நிலைமையில் வரலாறு என்று எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இல்லை. அவர்களின் பாத்திரம் மறைக்கப்பட்டோ அல்லது திரிக்கப்பட்டோதான் வரலாற்றுக் கதைகள் எழுதப்படுகின்றன. அதிலும் குறிப்பாகப் பட்டியல் இன மக்களுக்கு வரலாறு என்பதே மறுக்கப்பட்ட ஒன்றுதான். சாதியக் கட்டுமானத்தின் அடுக்குகள் எல்லாமும் ஒடுக்குமுறைகளால் நிரம்பியவை.
கொரோனாவுக்குப் பின்.. - கணேஷ் சுப்ரமணி
பூமி
வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்களின் உழைப்பு வீட்டுக்குள்
முடங்கிக் கிடக்கிறது. மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல; வரலாற்றையும் மாற்றிக் கொண்டிருக்கிறது
கொரோனா. இந்தக் கொடுந்தொற்று நோயிலிருந்து உலகம் மீளலாம். ஆனால் இந்நோய்
உருவாக்கியிருக்கும் தாக்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இருக்கும்.
மூன்றாம் விடுதலைப் போர் - கணேஷ் சுப்ரமணி
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை இப்படிச் சொல்வதில் தவறில்லை. 1947க்கு முன்னர் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக நடந்த இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் சமூக விடுதலையடையாமல் அரசியல் விடுதலையால் பயனில்லை என்று பெரியார் இந்திய நாட்டின் சுதந்திர நாளைப் புறக்கணித்தார். அது அரசியல் விடுதலைப் போர். பின்னர் சுதந்திர இந்தியாவில் மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக 1965இல் மொழி விடுதலைப் போரை நிகழ்த்தி வெற்றி பெற்ற வரலாறு நமக்குண்டு. தற்போது பண்பாட்டு விடுதலைப் போர் ஒன்றை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு இளைஞர்கள்; குறிப்பாக மாணவர்கள்.
ஜீன்ஸ் புரட்சி - கணேஷ் சுப்ரமணி
அவர்கள் பின்னால் நடிகர்கள் இல்லை;
அரசியல் கட்சிகள் இல்லை; ஊடகங்களும் பெரிய அளவில் இல்லை; ஆனால் அவர்களின்
முழக்கங்கள் தமிழ்நாடு முழுக்க ஒரே குரலாக எதிரொலிக்கிறது. இது எப்படி
சாத்தியமானது? மெரினாவில் போராடிய இளைஞர்களைக் கலைப்பதற்காக மின்சாரம்
துண்டிக்கப்பட்டு மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. எங்கும் இருள் சூழ்ந்த
போது அவர்களின் செல்போன்களின் ‘பிளாஷ் லைட்கள்’ ஒளிரத் தொடங்கின. தங்கள்
செய்தியை அதின் மூலம் அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்: ‘எங்களுக்கு யாரும்
தேவையில்லை; எங்கள் கையில் இருக்கும் செல்போன்கள் போதும்’
குருதிக் காட்சிகளும் குற்றச் சமூகமும் - கணேஷ் சுப்ரமணி
'வாட்ஸ் அப்' எனும் விசித்திர பூதம் தொடர்ந்து காட்சிகளைத் துப்புகிறது. குருதி படிந்த சில காணொளிக் காட்சிகள் சிந்தனையை உறையச் செய்கின்றன. கைகள் கட்டப்பட்ட ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்து தலையைத் துண்டிக்கும் காட்சி, குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நிறைந்த சாலை நடுவில் சிறை பிடிக்கப்பட்ட ஒருவரின் தலையைத் துண்டிக்கும் காட்சி, ஓர் இளம் பெண்ணை 'ஒழுக்க சீலர்கள்' பலர் சேர்ந்து பொது இடத்தில் கடுமையாகத் தாக்கி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தும் காட்சி, மெட்ரோ ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் ஏற முயலும் ஒருவரை ரயில் நசுக்கிச் சிதறடிக்கும் காட்சி என நீளும் பட்டியலை எழுதவே கைகள் நடுங்குகின்றன. ஆனால் இக்காட்சிகள், வாட்ஸ் அப்பில் விழித்து, வாட்ஸ் அப்பில் வாழ்ந்து, வாட்ஸ் அப்பிலேயே தூங்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் செல்போன்களில் நிறைந்து கிடக்கின்றன.
தமிழ்ப் புத்தாண்டு அரசியல் - கணேஷ் சுப்ரமணி
பத்மநாபசுவாமி கோயில்: மன்னர் கால சுவிஸ் வங்கி - கணேஷ் சுப்ரமணி
ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்கள் இழந்தது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும் இந்தியப் பணம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் குவிந்துள்ள சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், மத நிறுவனங்களும் நம் மக்களைச் சுரண்டி குவித்த பணம். இதே இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மாத வருமானம் இன்னும் ஆயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.
தில்சன் - திராணியற்ற சமூகம் - கணேஷ் சுப்ரமணி
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவக் குடியிருப்பில் வாதாம் பழக்கொட்டைகளைப் பறிக்கச் சென்ற சிறுவன் தில்சனை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார் ஓர் இந்திய ராணுவ அதிகாரி.
ஆன்டிலியா - மோசடி நிலத்தில் எழுந்த மாளிகை - கணேஷ் சுப்ரமணி
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் கனவு
மாளிகையான ஆன்டிலியா தற்போது சிக்கலில் மாட்டியுள்ளது. உலகிலேயே மிகப்பெரும்
செலவில் கட்டப்பட்டதாகப் பெருமையடித்துக் கொண்டு முகேஷ் அம்பானி கட்டிய வீட்டின்
பெயர்தான் ஆன்டிலியா. ஆன்டிலியா என்றால் மர்மத் தீவு என்று அர்த்தமாம். அதிகார
வர்க்கத்தின் அந்தப்புரங்கள் எல்லாமே மர்மம் நிறைந்த தீவுகள்தான்.
பொங்கல் எனும் பண்பாடு - கணேஷ் சுப்ரமணி
விளையாட்டை விழுங்கும் ஆக்டோபஸ் - கணேஷ் சுப்ரமணி

சிறுவர்களின்
கோடை விடுமுறையைக் கோலாகலமாய்த் தின்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்
பெரும்புயலுடன் ஓய்ந்திருக்கின்றன. சூது கவ்விய போட்டிகளின் பின்னணித்
தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி
விட்டிருக்கின்றன. இறுதிப் போட்டியில் மற்ற அணிகளையெல்லாம் விரட்டிவிட்டு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான தொழில் அதிபர் சீனிவாசனின் சென்னை
சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின்
மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இந்த இறுதிப் போட்டியின்போது மட்டுமே
இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளது. சூதாட்டப்
புகார்களில் சென்னை அணியின் முதலாளி சீனிவாசன் முதல் ரெய்னா, தோனி வரை
பலருடைய பெயர்களும் அடி மேல் அடி வாங்குகின்றன. ஐ.பி.எல். போட்டிகளில்
வீரர்களை விட அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும்தான் அதிகமாக
விளையாடியிருக்கிறார்கள்.
கர்னாடகா: மூன்றாவது சோதனைக் களம்
“முதலில் கொல்; காரணங்களைப் பிறகு உருவாக்கிக் கொள்ளலாம்”.
இதுதான் தற்போது சங் பரிவாரத்தைச் சேர்ந்த இந்து வெறியர்களின் பிரகனப்படுத்தப்படாத தாரக மந்திரம். ஒருவனைக் கொல்வதற்கு அல்லது கொலை வெறியுடன் தாக்குவதற்கு அவன் ‘இந்து அல்லாதவன்’ என்ற ஒரு காரணம் மட்டும் போதும் எனும் முடிவுடன் தங்கள் அழிப்பு வேலைகளை தீவிரப் படுத்தியிருக்கிறார்கள்.
இதுதான் தற்போது சங் பரிவாரத்தைச் சேர்ந்த இந்து வெறியர்களின் பிரகனப்படுத்தப்படாத தாரக மந்திரம். ஒருவனைக் கொல்வதற்கு அல்லது கொலை வெறியுடன் தாக்குவதற்கு அவன் ‘இந்து அல்லாதவன்’ என்ற ஒரு காரணம் மட்டும் போதும் எனும் முடிவுடன் தங்கள் அழிப்பு வேலைகளை தீவிரப் படுத்தியிருக்கிறார்கள்.
தமிழர்கள் (அ) அகதிகள்
‘அகதிகளாக முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்கப் போனன். அவர்களுக்கு இலங்கைக்குள் நீதி கிடைக்காது. அதற்கான சட்டங்கள் இங்கு இல்லை’. இப்படிச் சொன்னது ஒரு தமிழர் அல்ல; சிங்கள இனத்தைச் சேர்ந்த இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் நந்தன் சில்வா.
‘இலங்கையில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களை விட நன்றாகவே உள்ளன. அங்குள்ள மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை’. இதைச் சொன்னது ஒரு சிங்களர் அல்ல; ‘இந்து’ ராம் எனும் தமிழர்.
‘இலங்கையில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களை விட நன்றாகவே உள்ளன. அங்குள்ள மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை’. இதைச் சொன்னது ஒரு சிங்களர் அல்ல; ‘இந்து’ ராம் எனும் தமிழர்.
Subscribe to:
Posts (Atom)









