பிரிவுகள்

Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

திருக்குறளில் தெய்வம் - கணேஷ் சுப்ரமணி

சங்க காலத்துக்குச் சற்று பிந்தைய காலத்தில் தோன்றிய திருக்குறளில் எந்தவொரு கடவுட் கோட்பாட்டையும் வள்ளுவர் பின்பற்றவில்லை. எனவேதான் ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்தவரும் அவரைத் தங்கள் சமயத்தவர் என்று உரிமை கோருகிறார்கள். அந்த அளவுக்கு சமயப் பொதுமையைப் பேணியுள்ளதால்தான் திருக்குறள் உலகப் பொதுமறையாக மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதுப்புது விளக்கங்களை அளிக்கக் கூடிய செறிவு அதனுள் உண்டு.

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெண் கல்விச் சிந்தனைகள் - கணேஷ் சுப்ரமணி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதிக் காலம் முதல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலகட்டம் இந்தியச் சமூகச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கு முந்தைய காலகட்டத்தின் மதிப்பீடுகள் பெரும் சிதைவுகளையும், மாற்றங்களையும் சந்தித்த காலம் அது. வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களின் ஆதிக்கம், கிறித்தவச் சமயப் பரவல் போன்றவற்றால் இங்கு கல்வி முறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. காலங்காலமாக இருந்து வந்த வேதக் கல்வி, குருகுலக் கல்வி போன்றவை மாற்றம் பெற்றன. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான ஒன்றாக இருந்த பார்வையும் மாறத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வி கற்ற சில இந்தியர்களால் புதிய கல்விச் சிந்தனைகள் மலர்ந்தன. தமிழ்ச் சூழலில் இப்புதிய சிந்தனைகளைப் பேரூற்றாகப் பெருக்கெடுக்கச் செய்தவர் பாரதியார். குறிப்பாகப் பெண் கல்வி குறித்த அவருடைய சிந்தனைகள் அன்றையச் சூழலில் மரபுகளை மீறியதாகவும் எதிர்காலச் சிந்தனைகளின் முன்னறிவிப்பாகவும் இருந்தன. ஆனால் அவருக்கு முன்பே தமிழ் மரபுகளிலிருந்து விலகாமல் பெண் கல்வி குறித்த சிந்தனைகளை முன்வைத்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

ஆதிபகவன் முதற்றே உலகு - கணேஷ் சுப்ரமணி

வான்புகழ் கொண்ட வள்ளுவன் என்று பாரதியால் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றளவும் வாழ்வின் நெறியாளுகைக்கு ஏற்ற நூலாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதப்புது விளக்கங்களை அளிக்கக் கூடிய செறிவு அதனுள் உண்டு.

இதழ்ப் பணிகளில் பாரதியும் தாசனும் - 2 - கணேஷ் சுப்ரமணி

பாரதிதாசனின் இதழியல்
பாரதிதாசனின் இதழியல் என்பது பாரதியில் இருந்தே தொடங்குகிறது. பாரதியின் கலகக் குரல், துணிவு, தீவிரம், போர்க்குணம் ஆகிய அனைத்தும் பாரதிதாசனின் இதழ்ப் பணிகளிலும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது; ஆனால் வேறுபட்ட சித்தாந்தத் தளங்களில். பாரதிதாசனின் தொடக்க காலப் பாடல்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுப் பாடல்களாக இருந்ததால், இதழ்களில் அவற்றைத் தனது சொந்தப் பெயரில் வெளியிட அவரால் இயலவில்லை.

இதழ்ப் பணிகளில் பாரதியும் தாசனும் - 1 - கணேஷ் சுப்ரமணி

மகாகவி பாரதியார், புரட்சிக்கவி பாரதிதாசன் இருவரும் தமிழின் தனிப்பெரும் கவிஞர்கள் என்பதில் ஐயமேதும் இருப்பதில்லை. ஆனால் இருவரும் இந்தியத் தேசியம் து திராவிடத் தேசியம், ஆரியம் து திராவிடம், சமஸ்கிருத அபிமானம் து சமஸ்கிருத எதிர்ப்பு, கடவுள் ஏற்பு து கடவுள் மறுப்பு என்று முரண்பட்ட சித்தாந்தங்களின் அடையாளங்களாகச் சுட்டப்படுபவர்கள்.

ஜே.கே. எனும் மனிதனின் வாழ்க்கை - கணேஷ் சுப்ரமணி



'உங்களுக்கெல்லாம் தமிழைத் தெரியும்; ஆனால் தமிழுக்கு என்னைத் தெரியும்' என்று ஜெயகாந்தன் சொன்னதாகப் படித்திருக்கிறேன். அவருடைய படைப்புகளைப் போலவே இந்தச் செருக்கும் அவருடைய அடையாளமாக இறுதிக் காலம் வரை இருந்தது.

தி.ஜானகிராமன் நாவல்களில் தற்கொலை - கணேஷ் சுப்ரமணி


தற்கொலை என்பது ஒரு தனிமனிதனின் உளவியல் பிரச்சினையாகக் கொள்ளப்பட்டாலும், சமூகப் பின்புலத்தைப் புறக்கணித்துவிட்டு இப்பிரச்சினையின் ஆழத்தைக் கண்டுவிட முடியாது. ஒரு மனிதனின் உளவியலை அவன் சார்ந்த சமூகப் பின்னணியுடன் விவரிப்பதில் முன்நிற்கும் இலக்கிய வடிவம் நாவல். க்தமிழ்ப் படைப்புலகில் தனிமனித உளவியற் கூறுகளைத் தம் நாவல்களில் சித்திரத்த எழுத்தாளர்களுள் தனித்துவம் பெற்றவராக அடையாளம் காணப்படுபவர் தி.ஜானகிராமன். அவருடைய நாவல்களில் புலனாகும் தற்கொலை நிகழ்வுகளை அவற்றின் உளவியற் பின்னணியில் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 3 - கணேஷ் சுப்ரமணி

அணிதலும் களை(த்)தலும்:
சங்க காலப் பெண்கள் தங்கள் தோற்றத்துக்குப் பொலிவூட்டும் வகையில் வித விதமான ஆடை, அணிகலன்களை அணிந்ததாகச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. பஞ்சு, பட்டு, விலங்குகளின் மயிர் போன்றவற்றாலான அழகான ஆடைகளை அணிந்தனர். பலவிதமான கைவளைகள், மோசை எனும் மரகதக் கடைசெறி, பொன்னாலான சங்கிலிகள், பொன் ஞாண், காதணிகள், இடையில் மேகலை போன்றவற்றைப் பெண்கள் விரும்பி அணிந்ததாகத் தெரிகிறது.

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 2 - கணேஷ் சுப்ரமணி

சங்க இலக்கியத்தில் உடனுயிர் மாய்தல்:
சங்க இலக்கியங்களில் உடன்கட்டை ஏறுதல் மற்றும் கைம்மை நோன்பு நோற்றல் குறித்த செய்திகள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் உடனுயிர் மாய்தல் குறித்த செய்திகள் அரிதாகவே காணக்கிடைக்கின்றன. போர்க்களத்தில் இறந்துபட்ட சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் மற்றும் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி ஆகிய மன்னர்களின் மனைவியர், தத்தம் கணவர்களின் மார்பில் வீழ்ந்து உயிர் மாண்டதாகப் புறநானூற்றில் ஒரு பாடலில் கூறப்படுகிறது.

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 1 - கணேஷ் சுப்ரமணி

மனிதன் சாவை நாடும் மனநிலையும் சூழலும் தனித்துவம் வாய்ந்தவை. ‘உலகின் முக்கியப் பிரச்சினையே தற்கொலைதான்’ என்றார் ஆல்பர்ட் காம்யூ. ஒரு மனிதன், தன்னுடைய சாவை விழைந்து ஏற்பதற்குத் தனிப்பட்ட மனநிலை மட்டுமின்றி, அவன் வாழும் சமூகத்தின் நிர்ப்பந்தமும் முக்கியக் காரணமாகின்றது. அதாவது, ஒரு மனிதன் தன்னுடைய சாவை நாடிச் செல்வது தனிமனிதப் பிரச்சினையன்று; சமூகப் பிரச்சினை. சங்க இலக்கியத்தின் சில இடங்களில் அக்கால மகளிர் தங்களுடைய சாவை விரும்பி ஏற்றுக்கொள்ளும் விதமான நிகழ்வுகளைக் காணமுடிகிறது. சடங்கு வயப்பட்ட இந்நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள சமூக அசைவியக்கத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

விந்தன் நாவல்களில் சாவெண்ணங்கள்

மனித வாழ்வில் சாவு என்பது தவிர்க்க முடியாமல் இணைந்த ஒன்று. என்றாலும், சாவு குறித்த மதிப்பீடுகள் மனிதருக்கு மனிதர் வேறுபடும். சிலருக்கு அச்சமூட்டக் கூடியதாகவும் மற்றும் சிலருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் விளங்குவதால், சாவு குறித்து ஒவ்வொரு கால கட்டத்திலும் விரிவாகச் சிந்திக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு மனிதனின் மனம் மரணத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு அவன் வாழும் சூழல், எதிர்கொள்ளும் நிகழ்வுகள், இயல்பான உளநிலை ஆகியவை முக்கியக் காரணிகளாய் அமைகின்றன. இவ்வாறு சாவை  நோக்கி ஈர்க்கப்படும் மனத்தின் கூறுகளை எழுத்தாளர் விந்தன் எழுதிய ஆகிய நாவல்களின் வழியே இந்தக் கட்டுரை ஆய்கிறது.

சமண மரபில் இறப்பும் அதற்குப் பின்னரும்

மனித வாழ்வு சாவுடன் கட்டப்பட்டது. உலகளவில் சாவு மற்றும் அதற்குப் பின்னதான நிலை குறித்த தேடலில்தான் சமயச் சிந்தனைகள் வளர்ச்சியடைந்தன. ஒவ்வொரு சமயமும் தன்னுடைய தத்துவக் கட்டமைப்புக்குள் சாவு குறித்து ஆராய்ந்துள்ளன. சமண சமய மரபில் நின்று சாவு மற்றும் அதற்குப் பிந்தைய மனித வாழ்வின் இருப்பு அல்லது இன்மை குறித்த கோட்பாடுகளை ஆராயும் இச்சிறு ஆய்வுக்கு ஒப்பீட்டளவில் பிற சமயச் சிந்தனைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

பாரதியும் மொழியும் - கணேஷ் சுப்ரமணி

மொழி என்பது மக்களிடையே தகவல் பரிமாற்றப் பணிகளுக்காக உருவான வழிமுறை என்பது ஓர் எளிமையான விளக்கம். ஆனால் இந்த தகவல் பரிமாற்றத் தன்மை நிலவியல், தட்பவெப்பம், மனித உடற்கூறுகள் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடும் தன்மை உடையது. அதாவது ஒரு மொழியின் உருவாக்கத்தில் இக்கூறுகள் முக்கியப் பங்கு வகிப்பவை. இது மட்டுமல்லாது, ஒரு மொழியின் வளர்ச்சி என்பது வேறுசில கூறுகள் சார்ந்ததாகவும் அமைகிறது. அவை பொருளாதாரம், கலை, அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு உள்ளிட்டவை. இவ்வனைத்து கூறுகளின் தாக்கத்திடையே மொழி பற்றிய விளக்கங்கள் சிக்கலானவையாகின்றன. பல நூற்றாண்டுகளைக் கடந்து மொழி குறித்த விவாதங்கள் தொடர்கின்றன.

சித்தர்களின் உளவியல்

சமூகத்தின் உள்ளடக்கங்களில் எதிர்மறை அம்சங்கள் தவிர்க்க இயலாதவை. என்றாலும் இவற்றுக்கு எதிரான குரல்கள் எழுவதும் எல்லாக் காலகட்டத்திலும் தவிர்க்க முடியாதது. தமிழ்ச் சூழலில் இத்தகைய எதிர்ப்பபுகளை நிகழ்த்தியவர்களுள் சித்தர்களுக்குத் தனியிடம் உண்டு. அவர்கள் தம்மைச் சுற்றி நிகழ்ந்த அவலங்களைப் பொறுக்க முடியாமல் அவற்றிலிருந்து விடுபட்டு சமூக வெளிக்கு அப்பால் நின்று சாடியவர்கள். மக்கள் படும் துயரங்களைக் கண்டு அவற்றுக்கான காரணத்தைத் தேடியலைந்த சித்தர்களின் மனம் நிலையாமைத் தத்துவத்தைக் கண்டடைந்து அதனைப் பறைசாற்றியது. வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் கேள்விக்குட்படுத்தி அவர்கள் ஆராய்ந்தனர்.