ஒரு பள்ளிக்கூடத்தின் மரணம் - கணேஷ் சுப்ரமணி
எங்கள் வீடு - கணேஷ் சுப்ரமணி
அர்த்தங்கள் - கணேஷ் சுப்ரமணி
திசைமாறிய இசைப்புயல் - கணேஷ் சுப்ரமணி
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் ஒரு புயலாய் உருவெடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படி ஒரு புயல் உருவாகத் தேவையான காலநிலை அப்போது இருந்தது. ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவலாய் ஒலித்த போதும் கூட இளையராஜாவின் இசைத் தாலாட்டில் சொக்கிப் போயிருந்த பலரும் அந்தப் படத்தின் இசையை எப்போதாவது ஒரு முறை நிகழ்ந்து மறையும் அதிசயம் (one time wonder) என்றே கூறினர். ஆனால் அந்த அதிசயம் தொடர்ந்தது. ‘ரோஜா’ படத்தின் இசை, தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையிசையே அடுத்த சில ஆண்டுகளுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
தி.ஜானகிராமன் நாவல்களில் தற்கொலை - கணேஷ் சுப்ரமணி
தற்கொலை என்பது ஒரு தனிமனிதனின் உளவியல் பிரச்சினையாகக் கொள்ளப்பட்டாலும், சமூகப் பின்புலத்தைப் புறக்கணித்துவிட்டு இப்பிரச்சினையின் ஆழத்தைக் கண்டுவிட முடியாது. ஒரு மனிதனின் உளவியலை அவன் சார்ந்த சமூகப் பின்னணியுடன் விவரிப்பதில் முன்நிற்கும் இலக்கிய வடிவம் நாவல். க்தமிழ்ப் படைப்புலகில் தனிமனித உளவியற் கூறுகளைத் தம் நாவல்களில் சித்திரத்த எழுத்தாளர்களுள் தனித்துவம் பெற்றவராக அடையாளம் காணப்படுபவர் தி.ஜானகிராமன். அவருடைய நாவல்களில் புலனாகும் தற்கொலை நிகழ்வுகளை அவற்றின் உளவியற் பின்னணியில் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
தில்சன் - திராணியற்ற சமூகம் - கணேஷ் சுப்ரமணி
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவக் குடியிருப்பில் வாதாம் பழக்கொட்டைகளைப் பறிக்கச் சென்ற சிறுவன் தில்சனை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார் ஓர் இந்திய ராணுவ அதிகாரி.
ஆன்டிலியா - மோசடி நிலத்தில் எழுந்த மாளிகை - கணேஷ் சுப்ரமணி
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் கனவு
மாளிகையான ஆன்டிலியா தற்போது சிக்கலில் மாட்டியுள்ளது. உலகிலேயே மிகப்பெரும்
செலவில் கட்டப்பட்டதாகப் பெருமையடித்துக் கொண்டு முகேஷ் அம்பானி கட்டிய வீட்டின்
பெயர்தான் ஆன்டிலியா. ஆன்டிலியா என்றால் மர்மத் தீவு என்று அர்த்தமாம். அதிகார
வர்க்கத்தின் அந்தப்புரங்கள் எல்லாமே மர்மம் நிறைந்த தீவுகள்தான்.
உலகத் தமிழன் - கணேஷ் சுப்ரமணி
பொங்கல் எனும் பண்பாடு - கணேஷ் சுப்ரமணி
இருட்டில் சமச்சீர்க் கல்வி - கணேஷ் சுப்ரமணி

முந்தைய தி.மு.க. அரசு செய்த உருப்படியான ஒன்றிரண்டு சாதனைகளுள் ஒன்று சமச்சீர்க்கல்வி. தமிழ்நாட்டில் ஏழை மாணவனுக்கு ஒரு விதமான கல்வி; பணக்கார மாணவனுக்கு வேறு விதமான கல்வி என்றிருக்கும் நிலை மாறுவதற்கான ஒரு சிறு முயற்சியாக உருவான சமச்சீர்க் கல்வி, தனியார் கல்வியை மையப்படுத்தி உருவாகியிருந்த அதிகார மையங்களை எரிச்சலைடைய வைத்தது.
காலங்களில் அவர் வசந்தம் - கணேஷ் சுப்ரமணி
கர்ணன் படத்தில் இடம் பெற்ற 'மழை கொடுக்கும் கொடை' எனும் பாடலை அடிக்கடி விரும்பிக் கேட்பதுண்டு. அக்காலத்தின் பின்னணிப் பாடல் ஜாம்பவான்கள் டி.எம்.சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இருவரின் குரல்களும் அப்பாடலில் மிகுந்த கம்பீரத்துடன் ஒலிக்கும். இசையின் நடுவில் உறையும் மவுனத்தைப் போல அந்தக் வெண்கலக் குரல்களின் நடுவில் மென்மையாய் ஈர்க்கும் ஓர் ஆண் குரல். அது பி.பி.சீனிவாஸினுடையது.
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 3 - கணேஷ் சுப்ரமணி
அணிதலும் களை(த்)தலும்:
சங்க காலப் பெண்கள் தங்கள் தோற்றத்துக்குப் பொலிவூட்டும் வகையில் வித விதமான ஆடை, அணிகலன்களை அணிந்ததாகச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. பஞ்சு, பட்டு, விலங்குகளின் மயிர் போன்றவற்றாலான அழகான ஆடைகளை அணிந்தனர். பலவிதமான கைவளைகள், மோசை எனும் மரகதக் கடைசெறி, பொன்னாலான சங்கிலிகள், பொன் ஞாண், காதணிகள், இடையில் மேகலை போன்றவற்றைப் பெண்கள் விரும்பி அணிந்ததாகத் தெரிகிறது.
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 2 - கணேஷ் சுப்ரமணி
சங்க இலக்கியத்தில் உடனுயிர் மாய்தல்:
சங்க இலக்கியங்களில் உடன்கட்டை ஏறுதல் மற்றும் கைம்மை நோன்பு நோற்றல் குறித்த செய்திகள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் உடனுயிர் மாய்தல் குறித்த செய்திகள் அரிதாகவே காணக்கிடைக்கின்றன. போர்க்களத்தில் இறந்துபட்ட சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் மற்றும் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி ஆகிய மன்னர்களின் மனைவியர், தத்தம் கணவர்களின் மார்பில் வீழ்ந்து உயிர் மாண்டதாகப் புறநானூற்றில் ஒரு பாடலில் கூறப்படுகிறது.
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 1 - கணேஷ் சுப்ரமணி
மனிதன் சாவை நாடும் மனநிலையும் சூழலும் தனித்துவம் வாய்ந்தவை. ‘உலகின் முக்கியப் பிரச்சினையே தற்கொலைதான்’ என்றார் ஆல்பர்ட் காம்யூ. ஒரு மனிதன், தன்னுடைய சாவை விழைந்து ஏற்பதற்குத் தனிப்பட்ட மனநிலை மட்டுமின்றி, அவன் வாழும் சமூகத்தின் நிர்ப்பந்தமும் முக்கியக் காரணமாகின்றது. அதாவது, ஒரு மனிதன் தன்னுடைய சாவை நாடிச் செல்வது தனிமனிதப் பிரச்சினையன்று; சமூகப் பிரச்சினை. சங்க இலக்கியத்தின் சில இடங்களில் அக்கால மகளிர் தங்களுடைய சாவை விரும்பி ஏற்றுக்கொள்ளும் விதமான நிகழ்வுகளைக் காணமுடிகிறது. சடங்கு வயப்பட்ட இந்நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள சமூக அசைவியக்கத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
விளையாட்டை விழுங்கும் ஆக்டோபஸ் - கணேஷ் சுப்ரமணி

சிறுவர்களின்
கோடை விடுமுறையைக் கோலாகலமாய்த் தின்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்
பெரும்புயலுடன் ஓய்ந்திருக்கின்றன. சூது கவ்விய போட்டிகளின் பின்னணித்
தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி
விட்டிருக்கின்றன. இறுதிப் போட்டியில் மற்ற அணிகளையெல்லாம் விரட்டிவிட்டு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான தொழில் அதிபர் சீனிவாசனின் சென்னை
சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின்
மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இந்த இறுதிப் போட்டியின்போது மட்டுமே
இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளது. சூதாட்டப்
புகார்களில் சென்னை அணியின் முதலாளி சீனிவாசன் முதல் ரெய்னா, தோனி வரை
பலருடைய பெயர்களும் அடி மேல் அடி வாங்குகின்றன. ஐ.பி.எல். போட்டிகளில்
வீரர்களை விட அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும்தான் அதிகமாக
விளையாடியிருக்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)




.jpg)










