தொன்னூறுகளில் தொடக்கத்தில்
இசையில் மெல்ல நிகழத் தொடங்கியிருந்த மாற்றங்கள் இசை ரசிகர்களுக்குத் தெரியும்.
இசை நவீனமாதலின் அடுத்த கட்ட நகர்வின் தேவை உருவாகியிருந்தது. தமிழ் சினிமாவில்
தனிப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்த இளையராஜாவும் இதை உணர்ந்திருந்தார்.
நவீனத் தொழில்நுட்பங்களைத் தன் இசையில் அவர் அறிமுகப்படுத்துவதும் கையாளுவதும்
அந்த மாற்றத்துக்கான அவருடைய முயற்சிகளாக இருந்தன. ஆனால் ரகுமானின் அதிரடியான வரவு
